புருனே நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை: மீறினால் 5 ஆண்டு ஜெயில்..!!

248f9d6f-2576-4f24-b7d3-1caeaa6c8637_S_secvpfதென்சீன கடலில் மலேசியா அருகேயுள்ள குட்டித் தீவு நாடு புருனே. பணக்கார நாடான இது கடந்த 1984–ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தற்போது அங்கு மன்னர் ஆட்சி நடக்கிறது. ஹசன்னால் போல்கியா மன்னராக உள்ளார்.

முஸ்லிம் நாடான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அந்நாட்டு அரசு அதற்கான தடையை கொண்டு வந்தது.

அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடையில்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் கொண்டாடலாம்.