அமைச்சர்களின் மோதல் தொடர்பான ஊடக சந்திப்பு..!!

parliment (1)கடற்றொழில் அமைச்சர் திலீப் வெத ஆராச்சி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக கடந்த சில தினங்களாக பரவலாக பேசப்பட்டது.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மீனவர்கள் சிலர் நீர்கொழும்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் எந்த ஒரு பதிலும் வழங்காத நிலையில் , தனக்கு அது தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்புக்களில் கருத்து தெரிவித்த அமைச்சர்கள் இருவரும் , இந்த பிரச்சினை தொடர்பாக தாம் பெரிதாக அவதானத்தை செலுத்தவில்லை என தெரிவித்திருந்தனர்.