சக நடிகரை அடித்து நொறுக்கிய பிரியங்கா சோப்ரா..!!

Priyankaஇந்தி இயக்குநர் பிரகாஷ் ஜஹா இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா பொலிஸ் தோற்றத்தில் நடித்து வரும் படம் கங்கஜால்.

இந்தப் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா.

வட இந்தியாவில் போபால் தெருக்களில் படப்பிடிப்பு இடம்பெற்று வருகின்றது.

சமீபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்க அதிரடியான காட்சியில் நடித்தார் பிரியங்கா.

பொலிஸ் உடையில் மிடுக்காக வரும் அவர், ரவுடி ஒருவரை அடித்து நொறுக்குவது போன்ற காட்சியில், நிஜமாகவே சக நடிகர் ஒருவரை லத்தியால் நொறுக்கி எடுத்திருக்கிறார்.

அந்த படப்பிடிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.