ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான மன்மதன் நாயகி..!!

201609111537103932_manmathan-heroine-fair-with-gv-prakash_secvpfபாலிவுட்டில் பிரபல கதாநாயகியான மந்திரா பேடி, தமிழில் சிம்பு நடித்து வெளிவந்த ‘மன்மதன்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்திலும் மந்திரா பேடி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துச்சாமி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வைபவி சந்தில்யா, தம்பி ராமையா, ‘நெருப்புடா’ புகழ் அருண் காமராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘புருஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.