ஜனவரியில் ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்..!!

201609121219393136_dhanush-going-to-hollywood-in-january_secvpfநடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், தற்போது இயக்குனராகவும் மாறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், இடையே ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார்.

இப்படங்களுக்கு முன்னதாகவே ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருந்தார். தமிழிலேயே நிறைய படவாய்ப்புகள் வருவதால் ஹாலிவுட் படவாய்ப்பை தனுஷ் தவிர்ப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ் தான் நடிக்க ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்குள், அவர் இயக்கவிருக்கும் ‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படம் பிரபல பிரெஞ்சு நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ ஐ மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. அப்படத்தில் தனுஷூடன் இணைந்து ‎உமா தர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியா ஆகிய ஹாலிவுட் நடிகைகள்‬ முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை மர்ஜானே சத்ரபி என்ற ஈரான் மற்றும் பிரெஞ்சு படங்களின் இயக்குநர் இயக்க இருக்கிறார். இத்தாலி, மொரோகோ மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.