கதாபாத்திரத்துக்கு பதிலாக மகள் பெயரை சொன்ன கமல்: ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் ருசிகரம்..!!

201609121453322132_kamal-spell-real-name-in-shooting-sabash-naidu-shooting_secvpfகமல் தயாரித்து இயக்கி நடித்து வரும் புதிய படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமலின் மகளாகவே அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து கமலும் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. நவம்பரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். அமெரிக்கா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை கமல் பெயர் சொல்லி அழைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது ஸ்ருதியின் கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அழைப்பதற்கு பதிலாக ஸ்ருதியின் உண்மையான பெயரையே சொல்லி கமல் கூப்பிட்டு இருக்கிறார். இதனால் அந்த காட்சியை மீண்டும் படமாக்கும்படி ஆகி இருக்கிறது.

“நடிப்பில் எவ்வளவு பெரிய அனுபவசாலியான அவரே வாய்தவறி இப்படி சொன்னது உண்மையாகவே என் இதயத்தை தொடும் அனுபவமாக இருந்தது” என்று அமெரிக்க படப்பிடிப்பின் போது நடந்த இந்த சம்பவத்தை இப்போது சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.