சூர்யா படம் இயக்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை: விக்னேஷ் சிவன்..!!

201609121502028301_not-expect-direct-to-suriya-director-vignesh-shivan_secvpfவிஜய் சேதுபதி- நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: “நானும் ரவுடிதான் படத்தை முடித்த பிறகு ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா போன் செய்து என்னிடம் பேசினார். அதன் பிறகு தான் சூர்யாவுடன் படம் பண்ணும் யோசனை வந்தது.

முழுகதையையும் தயார் செய்த பிறகு சூர்யா சாரை சந்தித்தேன். கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்து விட்டது. அவர் என்னை ஊக்குவித்தார். இதனால் ஒரு பெரிய நடிகரிடம் கதை சொல்கிறோமே என்ற பதட்டம் ஏற்படவில்லை.

சிம்பு, விஜய்சேதுபதி இருவரிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன். சூர்யாவை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருடன் படத்தில் பணிபுரிவேன் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

என்னைப் போன்ற இளம் இயக்குனர்களுக்கு சூர்யா சார் வாய்ப்பளிப்பது நல்ல வி‌ஷயம். இந்த படமும் ‘நானும் ரவுடிதான்’ போன்று காமெடி, ஆக்‌ஷன், காதல் அனைத்தும் கலந்து இருக்கும். ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக அமையும்” என்றார்.