இனிமேல் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த வடிவேலு..!!

201609121544153053_dont-act-hero-character-comedy-actor-vadivelu_secvpfகாமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி ஒருசில படங்களில் நடித்தார். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தன. இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கத்திசண்டை’ படத்தின் மூலம் காமெடியனாக களம் இறங்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சிவலிங்கா’ படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்கிறார். வடிவேலுவின் ரீ-என்ட்ரி அவருக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளதாம். தொடர்ந்து காமெடி வேடத்திலேயே நடிக்க விருப்பப்படுகிறாராம்.

‘கத்தி சண்டை’ படத்தில் டாக்டராக வந்து கலகலப்பூட்டும் வடிவேலு, ‘சிவலிங்கா’ படத்தில் கதையோடு கலந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் காட்சிக்கு காட்சி காமெடி செய்யாமல் குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

தொடர்ந்து காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வருவதால், இனிமேல் காமெடி வேடத்தில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். ஹீரோ வேடங்கள் என்றால் அதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறாராம்.