செலவுக்கு பணம் கிடைப்பதால் சினிமாவுக்கு வந்தேன்: அமலாபால், ஹன்சிகாவின் தோழி..!!

201609121728025497_amalapaul-hansika-friend-says-she-came-to-film-industry-to_secvpf‘காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் அமலாபால் தோழியாகவும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஹன்சிகா தோழியாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இப்போது ‘வீரா’ படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார்.

இதில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ராதாரவி, யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜாராம் இயக்குகிறார். லியோன் ஜோம்ஸ் இசை அமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்தது குறித்து ஐஸ்வர்யா மேனனிடம் கேட்ட போது….

“எனது சொந்த ஊர் கேரளா. ஆனால் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். நான் சரளமாக தமிழ் பேசுவேன். முதலில் மாடலிங்கில் இருந்தேன். சில விளம்பர படங்களில் நடித்தேன்.

எனது தோழிகள் பாக்கெட் மணிக்காக சினிமாவில் தோழியாக நடிக்கச் செல்வார்கள். நானும் அப்படித்தான் செலவுக்கு பணம் கிடைப்பதால் ஜாலியாக நடிக்கச்சென்றேன். தமிழ்படங்களில் அறிமுகமான பிறகு கன்னடம், மலையாள படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது தமிழிலும் ஹிரோயின்ஆகி இருக்கிறேன்” என்றார்.