மீண்டும் இணையும் கலையரசன் – காளி வெங்கட்..!!

201609131043131998_kaali-venkat-kalaiyarasan-again-joint_secvpfகலையரசனும், காளி வெங்கட்டும் இணைந்து ‘டார்லிங் 2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஜானகி ராமன் என்பவர் இயக்குகிறார். இவர் இறுதிச்சுற்று படத்தில் இயக்குனர் சுதாவுக்கு அசோசியேட்டாக பணியாற்றியவர்.

இந்த படம் குறித்து காளி வெங்கட் கூறும்போது, மூன்று ஜோடிகளுக்குள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் காதல், ஒரே புள்ளியில் இணைவதுதான் படத்தின் மையக்கரு. இப்படத்தில் நான் கிராமத்து ஆளாக நடிக்கிறேன். கலையரசன் சிட்டியில் இருந்து வரும் பையனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக அகத்திணை படத்தில் நடித்த வர்மா ராமசாமி நடிக்கிறார் என்றார்.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கவிருக்கிறார். மேலும், காளி வெங்கட்டுக்கு மதுமிதா, வர்மா ராமசாமிக்கு மது ஷாலினி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். வி.எஸ்.தருண் பாலாஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தை சிவி குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.