படப்பிடிப்பின் போது முத்தம் : கதாநாயகன் கன்னத்தில் அறைந்த நடிகை..!!

201609131240298688_kiss-in-shooting-spot-actress-kick-to-hero_secvpfமானஸ், அமரன் உள்பட பலர் நடிக்கும் படம் ‘மெய்மை’. டி.எஸ்.திவாகரன் இதை இயக்குகிறார்.படப்பிடிப்பில் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்குனர் கதாநாயகனிடம் கதாநாயகியை அணைத்து முத்தமிட வேண்டும் என்பதை இயக்குனர் ரகசியமாக சொல்லிவிட்டு கேமராமேனிடம் ‘ஸ்டார்ட்’ சொன்னார்.

கதாநாயகன் ரஜின் யாரும் எதிர்பாராவண்ணம் நாயகியை அணைத்து ‘நச்’ என்று முத்தமிட அதிர்ச்சி அடைந்த நாயகி வித்யாஸ்ரீ ‘பளார்’ என்று நாயகனை கன்னத்தில் அறைந்துவிட்டார். ஓடி வந்த இயக்குனரும், கேமராமேனும் நிலைமையை விளக்கி சொன்னதும் நாயகனிடம் நாயகி மன்னிப்பு கேட்டார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு படப்பிடிப்பு அமைதியாக நடந்தது.