தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிச்சைக்காரன் நாயகி..!!

201609131354510008_pichaikkaran-actress-married-business-man_secvpfடைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. இதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சாத்னா டைட்டஸ். தமிழ், தெலுங்கில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஒரு பட நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. இதன் பங்குதாரர்களில் ஒருவர்தான் கார்த்தி.

இவர் ‘பிச்சைக்காரன்’ படவிழா தொடர்பாக அடிக்கடி சாத்னா டைட்டசை சந்தித்து பேசினார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. பின்னர் தீவிரமாக காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சமீபத்தில் சாத்னா டைட்டசும், கார்த்தியும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில், சாத்னா டைட்டஸ் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. என்றாலும் இந்த படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

திருமணம் குறித்து சாத்னா டைட்டசை மணந்துள்ள கார்த்தி கூறியதாவது:- நாங்கள் இருவரும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். சாட்னாவின் விருப்பப்படியும் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இந்த திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை சாத்னா குறைத்து இருக்கிறார். இது நாங்கள் இரண்டு பேரும் எடுத்த முடிவு. விரைவில் ஊர் அறிய திருமணம் நடக்கும். அதன் பிறகு சாத்னா படங்களில் நடிக்க மாட்டார். இல்லற வாழ்வை மட்டும் கவனிப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.