சென்னை 600 028 இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி உறுதியானது..!!

201609131521334491_chennai-600028-part-2-release-date-confirmed_secvpfவெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான ‘சென்னை 600 028’ வெளிவந்து 9 வருடங்களுக்கு பிறகு, தற்போது வெங்கட் பிரபு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முந்தைய பாகத்தில் நடித்த ஜெய், அரவிந் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், மிர்ச்சி சிவா, விஜயலட்சுமி, நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக, மஹத், வைபவ் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற நவம்பர் 10-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை நடந்த இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை 600 0028’ படம் போலவே இதுவும் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.