குத்துப்பாட்டுக்கு ஆடமறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

201609141341448541_rajesh-aishwarya-reject-glamorous-song_secvpf‘காக்காமுட்டை’ படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். இந்தி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு இயக்குனர் தனது படத்தில் ஒரு குத்து டான்ஸ் ஆடும்படி கேட்டுள்ளார். இதற்கு பெரிய தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஐஸ்வர்யா இதற்கு சம்மதிக்கவில்லை. இயக்குனரை திருப்பி அனுப்பிவிட்டார் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.