இன்றைய ராசிபலன் (13.09.2016)

admin-ajax
மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

கடகம்

கடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்