வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

ுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 69ம் நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தங்களின் சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் கோருகின்ற காணிகளை இந்த மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அறிவித்திருந்தது. எனினும் இந்த அறிவிப்பு மீதான அவநம்பிக்கை காரணமாக, இந்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அதேநேரம் பன்னங்கண்டி பகுதியிலும், இரணைத்தீவு பகுதியிலும் நிலத்தை மீட்க கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணாமல் போனோரின உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமும் இரண்டு மாதங்களைக் கடந்து இடம்பெற்று வருகிறது. இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்று காணாமல் போனோரது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், தங்களது தொழில் வாய்ப்புக் கோரிக்கைக்கு இன்னும் உறுதியான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், வடமாகாண தொழிலற்ற பட்டதாரிகள் தொடர்ந்தும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், 70 நாட்களை கடந்து முன்னெடுக்கப்படுகிறது. யுத்த சூழ்நிலையில் மிகவும் கடினப்பட்டு கற்று பட்டம் பெற்றுக் கொண்ட போதும், இதுவரையில் தங்களுக்கான நியமனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றமை வருத்தமளிப்பதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்தின் புதிய வேலை வாய்ப்பு திட்டங்களில் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளிலும் தொழிலற்ற பட்டதாரிகள் நீண்ட நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


Related Post

ஏலம் போட்டு விலைக்கு வாங்கப்படும் மணப்பெண்கள்..!! (வீடியோ)

01 Jan, 2017

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012