தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ிளையாட்டு விபரீதமாகி சிறுவனொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று அங்கும்புர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அங்கும்புர பிரதேசத்தின் தேயிலை தொழிற்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 18 வயதுடைய நபரொருவர், 16 வயது சிறுவனின் பின்புறத்தில் காற்றினை செலுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது , அவர்கள் இருவரும் குறித்த காற்று குழாயை எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி செலுத்தி விளையாடியுள்ளனர். பின்னர் 16 வயதுடைய சிறுவனால் மேற்கொள்ளப்பட்ட சவாலின் அடிப்படையில் , காற்றுக் குழாயை குறித்த சந்தேகநபர் சிறுவனின் பின்புறத்தில் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் போது , திடீரென வௌியான வாயு சிறுவனின் வயிற்றுப் பகுதிக்கு சென்றுள்ளதை தொடர்ந்து உடனடியாக சிறுவன் அங்கும்புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவனின் வயிற்றில் நிரம்பியிருந்த வாயு அகற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை குறித்த தொழிற்சாலையில் தொழில் புரியும் நிலையில் , அவரை சந்திக்க வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 18வயதுடைய குறித்த சந்தேகநபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

ஏலம் போட்டு விலைக்கு வாங்கப்படும் மணப்பெண்கள்..!! (வீடியோ)

01 Jan, 2017

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012