காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..!!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் காஷ்மீரில் 22 சமூக வலைதளங்களை மாநில அரசு முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் காஷ்மீரில் 95 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என்றும், இதனால் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது என்றும் போலீஸ் ஐ.ஜி. கிலானி தெரிவித்தார். மேலும், காஷ்மீரில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்குவது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

08 May, 2017

மணிப்பூர் மாநிலத்தில் கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி..!!

09 May, 2017