இந்திய பசுபிக் பிராந்தியக் கட்டடக்கலை - இந்து சமுத்திர மாநாடு 2017..!!

இத்தகையதொரு மாநாட்டினை ஒழுங்கமைப்பதில் இந்திய மன்றம் மற்றும் அதனுடைய பங்காளிகளான சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினதும் தலைமைத்துவத்தினை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். ஓர் இந்திய பசுபிக் பிராந்தியத்தின் சக்தியாக ஐக்கிய அமெரிக்கா எப்போதும் இருக்கும் என்ற ஐக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு நீண்டகால அம்சத்தினை மறுபரிசீலனை செய்வதன் மூலம் நான் இதனை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கின்றேன். ஏழு தசாப்தங்களிற்கும் மேலாக, கிழக்கு ஆபிரிக்காவின் கரையோரங்களிலிருந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை வரைக்குமான இந்தப் பரந்த விரிவாக்கம் முழுவதும் தேவைப்படுகின்ற இந்த வேறுபாடான தனித்தன்மைகளை நாம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளோம். இனிவரும் தசாப்தங்களிலும் இதில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. இந்த ஆற்றல் கொண்ட பிராந்தியத்திற்கு அமெரிக்காவின் இணைப்பானது புதிய ஒன்றல்ல. இரு நூற்றாண்டுகளிற்கு முன்னர் புதிய இங்கிலாந்திலிருந்து கப்பல்கள் பொஸ்ரனுக்கும் கல்கத்தாவிற்குமிடையில் இந்து சமுத்திரத்தின் வர்த்தகக் கடல் மார்க்கமாக வாசனைத்திரவியங்கள், தேயிலை மற்றும் பனிக்கட்டிகளையும் கூட எடுத்துக் கொண்டு சென்றன. இன்று இந்த நிலை வேகமாக முன்னேற்றமடைந்து, இந்தப் பிராந்தியத்தில் எமது கூட்டாண்மை மற்றும் பகிரப்படும் மூலோபாய நலன்களை எப்போதும் நிரந்தரமாகக் கொண்டுள்ளன. அடுத்து வரும் சில நிமிடங்களில் நான் இந்து சமுத்திரத்தின் பக்கமும் அதேபோல் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு மற்றும் இராஜதந்திரச் செயலாண்மைத் திறத்தின் பக்கமும் எனது பார்வையைச் செலுத்த விரும்புகின்றேன். முதலாவதாக, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படையான அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை மேம்படுத்தும் இந்து சமுத்திரத்திற்கான பொதுவான ஒரு தூரநோக்கு எம்மிடம் இருக்கின்றது. பிராந்தியத்தின் குடிமக்களுக்கும் பொறுப்புடைமைகளுக்கும் முன்னுரிமை அளித்தல், திறந்த சந்தை, நிலையான நன்மைகளை வழங்குதல் ஆகிய பிராந்தியரீதியான முன்னெடுப்புக்கள் யாவும் மிகவும் நிலையானதாக இருக்கும். இரண்டாவதாக, இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், அதேபோல் மனிதாபிமான மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளுக்குப் பதிலளிப்பதற்கும் நாடுகள் திறம்படச் செயலாற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இத்தகைய, மனோபலத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பயிற்சியின் மூலம் இந்தச் சிக்கலான பிராந்தியத்தில் பாதுகாப்புச் சுமையைப் பகிர்ந்து கொள்ள முடியும். இறுதியாக, வழிநடத்தும் சுதந்திரம் மற்றும் சிக்கல்களின் அமைதியான தீர்வு ஆகியவற்றினை உள்ளடக்கும் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கொள்கையான பிராந்தியக் கட்டிடக்கலை அமைப்பினை நாம் ஆதரிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் சுதந்திரமாகப் பறந்து புறப்பட்டுச் சென்று சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் இடங்களில் சென்று செயற்பட அவற்றிற்கு உரிமை உண்டு. முதலில் பொருளாதார விதிமுறைகளுடன் ஆரம்பிக்கலாம். இந்து சமுத்திரமானது உலகளாவிய வர்த்தகம் மற்றும் வாணிபம் ஆகியவற்றின் அடித்தளத்தில் உள்ளதனால் இதனுடைய கடல் மாக்கத்தின் வழியாகப் பயணிக்கும் வகையில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உலக எண்ணெய் வர்த்தகமும் கிட்டத்தட்ட உலகின் அரைவாசியான 90,000 வணிகக்; கப்பல்களும் பயணிக்கும் பாதையாக இது உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பூமியில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சிலவும், உலகின் மக்கள் சனத்தொகையில் கால்வாசிப் பகுதியும் உள்ளதுடன், அவர்களில் ஐநூறு மில்லியன் பேர் வரையில் இன்னும் நம்பகத்தன்மை வாய்ந்த அதிகாரத்தைப் பெறாத நிலையில் உள்ளனர். பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் என்பது நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

08 May, 2017

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..!!

09 May, 2017