ஆப்கான் குண்டு வெடிப்பு: சனத், மஹரூப் நாடு திரும்பினர், அஷான் வரவில்லை..!!

ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்த சோதனைச் சாவடியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த மைதானத்தில் இடம்பெறவிருந்த போட்டியொன்றுக்காக, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான, சனத் ஜெயசூரிய, பர்விஸ் மஹரூப், அஷான் பிரியஞ்சன மற்றும் போட்டி நடுவர் கிரகம் லெப்ரோய் ஆகியோர் சென்றுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், சம்பவம் இடம்பெற்ற வேளை, அவர்கள் அந்த விளையாட்டு மைதானத்தில் இருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இன்று அதிகாலை ஜெயசூரிய மற்றும் மஹரூப் ஆகியோர் போட்டிகளை இரத்துச் செய்து விட்டு நாடு திரும்பியுள்ளனர். எனினும், அஷான் பிரியஞ்சன மற்றும் கிரகம் லெப்ரோய் ஆகியோர் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Related Post

வடக்கு கிழக்கில் பல்வேறு விடயங்கள் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன..!!

08 May, 2017

தேயிலை தொழிற்சாலையில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

08 May, 2017

காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த 95 இளைஞர்கள் - போலீஸ் அதிகாரி தகவல்..!!

09 May, 2017