'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று இலவச அப்பியாசப் புத்தகம் விநியோகிக்கப்படவிருந்த நிலையில் அதற்கென முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் மக்கள் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த மண்டப மறுப்பானது, காத்தான்குடியிலுள்ள முக்கிய அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாகவுமே நடைபெற்றுள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்தது. சர்வாதிகாரப்போக்கைக் கைவிடு, தவிசாளரே மக்கள் வழங்கிய அதிகாரத்தை அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தாதே, கல்விக்கு உயிர் கொடுத்த காவியத் தலைவரைப் பாரீர், ஏழை மாணவர்களுக்கு உதவி வழங்க மறுக்கும் பிரதி அமைச்சரே நீ என்ன தங்க மகனா, என்ற கோசங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் ஏந்திய நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


Related Post

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012

புதியதோர் தேசத்தை கட்டியெழுப்ப அடியெடுத்து வைப்போம்...!!! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

01 Jan, 2012