முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கேரள அரசு அணைப்பகுதியில் தன்னிச்சையாக மீண்டும் ஆய்வு நடத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஐவர் குழுவை நியமித்திருந்தும், அந்த குழுவுக்கு சம்பந்தம் இல்லாத, ரூர்க்கி ஐஐடியின் இணைப் பேராசியர் ஷி.ரி.மிஸ்ராவைக் கொண்டு, கேரள அரசு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மிஸ்ராவுடன் கேரள அதிகாரிகளும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்தக்குழு முல்லைப் பெரியாற்றின் பிரதான அணை, பேபி அணை, மதகுப் பகுதி ஆகிய இடங்களில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்கு பிறகு கேரள நீர்வளத்துறை பொறியியலாளர்கள், முல்லைப் பெரியாறு பாதுகாப்பு உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து, எதிர்வரும் 15ஆம் திகதி கேரள அரசிடம் இந்த ஆய்வு பற்றி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.


Related Post

புதியதோர் தேசத்தை கட்டியெழுப்ப அடியெடுத்து வைப்போம்...!!! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

01 Jan, 2012

Maldives bans hotel spas after protests

01 Jan, 2012

ஈ.பி.ஆர்.எல்.எப்(பத்மநாபா) இன் தமிழ் தேசியக் கூடமைப்பிற்கு எதிரான அரசியல்...!!! சுதர்சன் (photos)

01 Jan, 2012