வடக்கு கிழக்கில் வறிய நிலை -பிரித்தானியா...!!

british-flag_0கடந்த 2013ம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை நேற்று பிரித்தானியா வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பகுதிகள் மற்றும் வடமாகாணத்தின் சில பகுதிகளில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஊடக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் அலன் டன்கான் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் மில்லேனியம் இலக்குகளை இலங்கை அடைந்து வருகிறது. எனினும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தொடர்ந்தும் வறுமை நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012