இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கைது!!

4இந்தியாவின் தனுஷ்கோடியில் கைதுசெய்யப்பட்ட, இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களில், இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட கே.தயாபராஜா எனும் குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற சில நிறுவனங்கள் குறிப்பிட்டதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். புகழிடம்கோரி வௌிநாடு செல்பவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்தால், நாட்டில் காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பில் தகவல்களை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உதவியை எதிர்பார்ப்பதாகவும் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012