சர்­வ­தேச சட்­டங்­களை மீற­வில்லை விமர்­ச­னத்தை நிரா­க­ரித்­தது ஆஸி.....!!

238521-130928-twam-julieபுக­லிடக்கோரிக்­கை­யா­ளர்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச சட்­டங்­களை அவுஸ்­தி­ரே­லியா மீற­வில்­லை­யென அந்த நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜுலி பிஷொப் தெரி­வித்­துள்ளார். அண்­மையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பாது­காப்பைத் தேடி சென்ற 153 இலங்கை தமிழ் அக­திகள் கடலில் இடை­ம­றிக்­கப்­பட்ட விடயம் குறித்து ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான அமையம் தமது அதி­ருப்­தி­யையும் கவ­லை­யையும் வெளி­யிட்­டி­ருந்­தது. அத்­துடன், சர்­வ­தேச நிய­மங்கள் மற்றும் கட­மைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்று அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நிலையில், ஆஸியின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜுலி பிஷொப் அந்­நாட்டு ஊட­க­மொன்­றிற்கு கருத்து வெளி­யி­டு­கையில், எல்லைப் பாது­காப்­பினை உறுதி செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும். கடலில் பெண்­களும், ஆண்­களும் சிறு­வர்­களும் கொல்­லப்­ப­டு­வ­தனை அர­சாங்­கத்­தினால் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற உறுதி மொழியின் அடிப்­ப­டை­யி­லேயே தேர்­தலில் அர­சாங்கம் போட்­டி­யிட்­ட­தாகத் தெரி­வித்­துள்ளார். எவ்­வா­றெ­னினும், இலங்கைத் தமிழ் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களின் இரண்டு பட­கு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்­பது பற்றி குறிப்­பிட முடி­யாது. இவ்­வா­றான தக­வல்­களை வெளி­யி­டு­வது சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தல்­கா­ரர்­க­ளுக்கு சாத­க­மாக அமை­யலாம் என அவர் தெரி­வித்­துள்ளார். இடை­ம­றிக்­கப்­பட்ட அக­திகள் காணாமல் போக செய்­யப்­ப­ட­வில்லை அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் இலங்­கையில் இருந்து பட­குகள் மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்ற 200 பேரை காணாமல் போகச்­செய்­ய­வில்லை என்று அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய ஊடகம் ஒன்றின் அர­சியல் நிகழ்ச்சியின்­போது கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த அவுஸ்­தி­ரே­லிய தொழில் அமைச்சர் எரிக் எபேட்ஸ் இந்த கருத்தை தெரி­வித்­துள்ளார். முதல் படகில் சென்ற 153 பேரும் மற்றும் ஒரு படகில் சென்ற 50 பேரும் அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டை­யி­னரால் இடை­ம­றிக்­கப்­பட்டு பின்னர் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கின. எனினும் அவர்கள் கைய­ளிக்­கப்­பட்­டார்­களா? என்ற விடயம் இது­வரை வெளியாகவில்லை. உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இது தொடர்பில் கருத்துக்கூற மறுத்துவருகின்றன. இந்தநிலையில் கருத்துரைத்துள்ள எபேட்ஸ், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த அகதிகள் பராமரிக்கப்படுவர் என்ற உறுதிமொழியை வழங்கினார்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012