தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயம்...!!

20437833271748791891accident2தெற்கு அதிவேக வீதியில் காலி பின்னதுவ வெளியேறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று பகல் 12 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொட்டாவையில் இருந்து காலி நோக்கிச் சென்ற இபோச பஸ் அனுமதிச் சீட்டு பெற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் தயினார் பஸ் சாரதி உள்ளிட்ட 14 பேர் காயமடைந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பின்னதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012