கொஸ்லாந்தை மண்சரிவையடுத்து மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்...!!

fffffffகொஸ்லாந்தை மண்சரிவை அடுத்து, மலையகத்தின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. மலைக்குன்றுகளுக்கு அருகில் தாம் பல நூற்றாண்டு காலமாக பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வருவதாகவும், தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துமாறும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி லிந்துலை – சென்றகுராஸ், கிளனிக்கலஸ் மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் நேற்று (04) கவனயீர்ப்புப் பேராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, மஸ்கெலியாவிலும் நேற்று கவனயீர்ப்புப் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தாம் வாழ்கின்ற பகுதிகளில் நில வெடிப்புக்கள் காணப்படுவதாகவும், இந்த விடயம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை தமது பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்து இந்த கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012