கழிவு எண்ணெய் நீரில் கலப்பது தொடர்பாக தாக்கல்...!!

88888கழிவு எண்ணெய் நீரில் கலப்பது தொடர்பாக தாக்கல் செயயப்பட்ட வழக்கில் அரச ஊழியர்களை அரசதரப்பின் சாட்சியாக மாற்றுவதென தீர்மானம்!! சுன்னாகம் பொலிசாரினால் கழிவு எண்ணெய் நீரில் கலப்பது சம்பந்தமாக மல்லாகம நீதிமன்­றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் அரச ஊழி­யர்களை அரச தரப்பின் சாட்சியாக மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த பல வரு டங் க ளாக இலங்கை மின் சார சபையின் சுன்னாகம் மின் உற்பத்திநிலையத்திலிருந்து வெளியேற்றப் பட்ட கழிவு எண்ணெய் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு உட் பட்ட பிர தேசத்தின் கிண றுகளில் கலந்துள்ளது. இதனால் அந்நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இதனை சுகாதாரவைத்தியதிகாரிகள் பணிமனைகள் சுற்று சூழல் அபிவிருத்தி அதிகாரசபை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உடுவில் தெல்­லிப்பழை பிரதேசசபைகளும் இதனை உறுதிப்ப டுத்தியுள்ளன. இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொது மக்கள் செய்தமுறைப்பாட் டின் அடிப்படையில் மல்லாகம் நீதிமன்றத்தில் உடுவில் பிரதேச சுகாதாரவைத்தியதி­காரிசுன்னாகம் பிரதேச சபைத்தலைவர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை­யின் பொறியியலாளர் மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரி ஆகியவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நேற்று முன்தினம் மல்லாகம் நீதி மன்றத்தில் நீதி தி எஸ். ச திஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. அதன் போது எதிராளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தர ணிகள் ஏற்கனவே இந்த நீதி மன்றத்தில் இரண்டு வழக்குகள் பொது மக்களினாலும் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிக ரியினாலும் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும் அரச அலுவலர்களாக இருப்பதனால் அவர்களை எதிராளிகளாக கருத வேண்டாம் என விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த பயன்பாடுகள் உடைய கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தமை தொடர்பாக வழக்குகளில் குறிப்பிட்ட அரச ஊழியர்களை அரச சாட்சிகளாக ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றம் தீர்மானித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிரடியின் யாழ் நிருபர்களில் ஒருவராகிய ...ரட்ணம்...


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012