மகிந்த தேர்தலில் போட்டியிட கூட்டங்கள் தேவையில்லை ; அமைச்சர் ராஜித்த..!!

789898முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தேவை இருக்குமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி அதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (19) நடைபெற்ற போது கடந்த 18ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்றக் கூட்டம் தொடர்பில் கேட்கப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தேவையிருக்குமாயின் அதுகுறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி அந்தச் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை. இதற்காக எவ்விதக் கூட்டங்களையும் நடத்த வேண்டிய தேவை இல்லை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுக்கின்றமையினால், அவர் தற்போது கூட அரசியலில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நுகேகொடை கூட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், தான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதாக குறிப்பிட்டிருக்கவில்லை என்றும், மக்களின் விருப்பத்திற்கு இணங்க செயலாற்றுவதாகவே அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கான பணிகளை கட்சித் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கும்போது, மகிந்த ராஜபக்ச அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றாரா என்பதைத் தீர்மானித்தப் பின்னரே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அவர் பெயரிடப்படுவாரா என்பது குறித்த தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகிந்த ராஜபக்ச இதுவரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012