மகிந்த ஆட்சியை விட மைத்திரி ஆட்சியில் மோசடி..!!

1434251426_5893879_hirunews_mahinda-nandaமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலும் பார்க்க பாரிய அளவிலான மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.' முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கம இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நாவலப்பிடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கடந்த தினத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விரைவில் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். மகிந்த ஆட்சி காலத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்கள். எனினும் இந்த அரசாங்கத்தில் அதைவிட பாரிய மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளன. அதனை எதிர்வரும் சில தினங்களில் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012