அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து முன்னாள் கவர்னர் விலகல்..!!

e124bcb2-903c-4d52-9652-10fffbd5d6bc_S_secvpfகுடியரசு கட்சி வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வந்த முன்னாள் டெக்சாஸ் மாகாண கவர்னர் ரிக் பெர்ரி, தனது போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக கட்சியிலும், குடியரசு கட்சியிலும் பலர் வரிந்து கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் களமிறங்கி உள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டெக்சாஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் ரிக் பெர்ரியும் இந்த களத்தில் இருந்து வந்தார். ஆனால், போட்டியில் இருந்து விலகி விட்டதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். மிசவுரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் இதை அறிவித்தார். குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிய முதல் நபர், ரிக் பெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி அந்த கட்சி வேட்பாளர்களுக்கான போட்டியில் ஜெப் புஷ், டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் முன்னிலையில் உள்ளனர்.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012