ஏமனில் நடந்த போர் குற்றங்களுக்காக வழக்கா? அச்சத்தில் இங்கிலாந்து..!!

55d4b2a1-d475-4468-a6c2-dc3e30588dbd_S_secvpfஏமனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்காக தங்கள் மீது வழக்கு தொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் இங்கிலாந்து உள்ளது. அரேபிய நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி தலைமையிலான அதிபர் ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஷியா இனத்தின் ஒரு பிரிவான ஹவுத்தி இன மக்கள் அதிபரின் ஆட்சிக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புரட்சியை முறியடிக்க சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் நடந்துவரும் இந்த கொடூரமான உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். இந்த போரில் மருத்துவமனை உட்பட பொதுமக்கள் கூடும் இடங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி ஏமன் மக்கள் மீது தாக்குதல் நடத்த சவுதி அரேபியா பயன்படுத்திய ஏவுகணைகள் இங்கிலாந்திடமிருந்து வாங்கப்பட்டதாகவும், எனவே ஏமனில் நடைபெற்ற போர்க்குற்றாங்கள் தொடர்பான விசாரணையில் இங்கிலாந்துக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்தின் வெளிவுறவு துறை அந்நாட்டை எச்சரித்துள்ளது. மேலும் பல முக்கிய மனித உரிமை அமைப்புகள் அமெரிக்கா மீதும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளன.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012