சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை...!!

dfdfdfdfசத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து பஸ்தர் மண்டல காவல் துறை ஐ.ஜி. எஸ்.ஆர்.பி.கல்லூரி கூறியதாவது: பஸ்தர் மாவட்டம், மர்தும் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொர்லி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாதுகாப்புப் படையினருடன் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். ஒருகட்டத்தில், மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தபோது, பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், தாக்குதலைத் தொடர முடியாத மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். முன்னதாக, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சடலம் அருகே இருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்றார் கல்லூரி.


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012