சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: ஐவர் கைது – கல்ஹின்னயில் சம்பவம்..!!

1கண்டி , கல்ஹின்னயில் 02 குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அங்கும்புர பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சிங்கள வாலிபர் குழு ஒன்று நேற்றிரவு (14) மதுபோதையில் கல்ஹின்னை வர்த்தக நிலையமொன்றிக்கு சென்று சிகரெட் கேட்டு குழப்பம் விளைவித்துள்ளனர். இச்சம்பவம் வாக்குவாதமாக மாறி கைகலப்பில் முடிந்துள்ளது. அருகில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கும் கெட்ட வார்த்தைகளினால் ஏசியதுடன் அவர்களுடன் வம்புக்கும் சென்றுள்ளனர். இவ் வாக்குவாதம் இரு குழுக்களும் மோதுமளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது. இக்கைகலப்பை கேள்வியுற்ற பொலிசார் குறித்த சம்பவம் இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர். போதையிலிருந்து பெரும்பான்மை; இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் பொலிசாரும் காயமடைந்தனர்.சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிரடிக்காக மலையகத்தில் இருந்து மலையரசன்


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012