ஆர்யா படத்துக்கு ரஜினி தலைப்பு இல்லை...!!

4ad845b3-613a-4ac2-9957-83cc046ca4db_S_secvpfரஜினி நடிப்பில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தனிக்காட்டு ராஜா’ படத்தின் தலைப்பு, ஆர்யா நடிக்கப் போகும் புதிய படத்துக்கு வைக்கப்போவதாக சமீபத்தில் இணைய தளங்களில் செய்தி பரவியது. ஆனால், அந்த தலைப்பை தேர்வு செய்யவில்லை என்று இப்படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்யா, கேத்திரின் தெசரா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கவிருக்கிருக்கிறார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்ற ரஜினி படத் தலைப்பை தேர்வு செய்துள்ளதாக வெளிவந்த தகவலையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இன்னும் படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை. தனிக்காட்டு ராஜா என்ற தேர்வு செய்ததாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10-ம் தேதி தொடங்குகிறதாம். இதற்காக திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.


Related Post

காதல், கல்யாணம் இது எனது சொந்த விஷயம்: சமந்தா புகைச்சல்!

22 Jan, 2013

கவர்ச்சி படங்கள்.. PART -3

29 Jan, 2013

ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் - ஷில்பா ஷெட்டி

10 Sep, 2013