எல்லோரும் எனக்கு போட்டி தான்: மஞ்சிமா மோகன்..!!

201607091307057880_Everyone-is-competing-for-me-manjima-Mohan_SECVPFமலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகி அந்தஸ்து பெற்றவர் மஞ்சிமா மோகன். ‘ஒருவடக்கன் செல்பி’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு இவரை தமிழுக்கு கொண்டு வந்தது. அதுவும் கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழ்பட நாயகி ஆகும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் சிம்பு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து இருக்கிறார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்கவும் மஞ்சிமா மோகனுக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. இது பற்றி கூறிய அவர்... ‘‘தினமும் புதுப்புது நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எல்லோருமே போட்டி தான். இவர் தான் எனக்கு போட்டி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவனம் முழுவதும் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது. எனக்கு கிடைக்க வேண்டிய படங்கள் நிச்சயம் என்னிடம் வரும். அதை யாரும் தடுக்க முடியாது’’ என்றார்.


Related Post

காதல், கல்யாணம் இது எனது சொந்த விஷயம்: சமந்தா புகைச்சல்!

22 Jan, 2013

கவர்ச்சி படங்கள்.. PART -3

29 Jan, 2013

ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் - ஷில்பா ஷெட்டி

10 Sep, 2013