மெர்சல் சர்ச்சை: ரசிகர்கள் மெர்சலாக வேண்டாம்..!!!

‘தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக...’ என்ற சப்டைட்டிலுடன், மெர்சல் என்ற பெயரை டிரேட்மார்க்காகத் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பதிவுசெய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி 24 நாட்கள் ஆகின்றன. ஆனால், இந்த டைட்டிலைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏ.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மெர்சல் திரைப்பட தயாரிப்புத் தரப்பிலிருந்து பதிலளிக்கும்வரை மெர்சல் என்ற பெயரைப் பயன்படுத்தி எவ்வித விளம்பரமும் செய்யக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தின் கில்டு அமைப்பு உட்பட எந்த சங்கத்துக்கும் கட்டுப்படாதது எங்கள் டிரேட்மார்க் என்று மெர்சல் டீம் பெருமைப்பட்டுக்கொண்டதற்கு மாறாக, அவர்களுக்கே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்டு 29ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திலும், நாளேட்டிலும் இந்த டிரேட் மார்க் குறித்த செய்தி வெளியானது. உண்மைதான். தென்னிந்திய சினிமா வரலாற்றில் இது முதல்முறை. ஆனால், அதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் அதிக வித்தியாசம் இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குத் தகவல் கொடுத்தவர் “மெர்சல் திரைப்படத்தை நாங்கள் ஒரு புராடெக்டாகப் பார்க்கிறோம். ஒரு திரைப்படமாக எடுத்து, ரிலீஸாகி வசூல் செய்ததும் மறந்துவிடாமல், எங்கள் மெர்சல் எப்போதும் ஒரு வணிகப் பொருளாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். ஹாலிவுட் உள்ளிட்ட உலகத் திரைப்படங்கள் பலவும் தங்களது பெயரை டிரேட்மார்க்காகவும் பதிவுசெய்துவிடுகின்றன. தலைப்பு, திரைப்படம் என்பதையும் கடந்து, வணிகப் பொருளாக மாற்றப்படும். குறிப்பாக சூப்பர் ஹீரோக்கள். பொம்மைகள், ஆடைகள், திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்திலும் டிரேட்மார்க் செய்யப்பட்ட பெயருடன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் டிரேட்மார்க் செய்யப்படாத பெயர்களில் யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளை வேண்டுமானாலும் சந்தைப்படுத்தலாம். ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஹீரோக்களின் உடைகளை விற்கும் மார்க்கெட்டில் இது மிகப் பெரும் போட்டியாக இருக்கும். உதாரணத்துக்கு Toy Stories, Batman, Cars, Superman, Avengers போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். மார்வெல் காமிக்ஸ் நிறுவனம், தனது புத்தகத்துக்காக உருவாக்கப்பட்ட கேரக்டர்களை டிரேட்மார்க் செய்துவைத்திருந்ததால் தான், இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுவரை அவற்றின் கதைகளை யாராலும் திரைப்படமாக எடுக்கமுடியவில்லை. மார்வெல் நிறுவனமே தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இன்று முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. திரைப்பட வசூலுக்கு நிகராக இந்நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் மற்ற பொருட்களின் வியாபாரமும் இருக்கிறது. இப்படியொரு மார்க்கெட்டை இந்திய சினிமாவில் உருவாக்குவதற்காகத்தான் தேனாண்டால் நிறுவனமும் முயற்சி செய்ததாக இதுவரை வரலாறு இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏ.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கில், “ மெர்சலாயிட்டேன் என்ற பெயரைத் தயாரிப்பாளர் சங்கத்தின் கில்டு அமைப்பில் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். எனவே, இப்போது மெர்சல் என்ற பெயரில் தேனாண்டால் நிறுவனம் உருவாக்கியிருக்கும் திரைப்படத்தை ரிலீஸ் செய்யத் தடைவிதிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பாக பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டதால் அக்டோபர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்ததுடன், அதுவரையில் மெர்சல் திரைப்படத்தின் புரமோஷனையும் நிறுத்திவைக்குமாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெர்சல் டீசர் வெளியான அடுத்த நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால், அட்லீ பிறந்தநாளன்று மெர்சல் டீசரை ரிலீஸ் செய்து நடத்திய கொண்டாட்டங்கள் தப்பித்துவிட்டன. ஆனால், படத்தின் ரிலீஸ் நெருங்குவதால் வழக்கம்போல பெரிய படங்களுக்குப் பிரச்னையை உருவாக்கி விளம்பரம் தேட முற்படுகிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. ஆனால், மெர்சல் என்ற பெயரை டிரேட் மார்க்காகப் பதிவு செய்யவே ஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று மெர்சல் டீம் சொல்கிறது. அது சம்பந்தப்பட்ட சட்டங்களைப் படித்து, தங்களுக்கான வாய்ப்பைத் தேட எங்களுக்கு 24 நாட்கள் ஆகியிருக்கக் கூடாதா என்று ஏ.ஆர்.ஃபிலிம்ஸ் கேள்வி எழுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்திக் குறிப்பின் இறுதியில் இந்த டிரேட்மார்க் பதிவு விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, மெர்சலாயிட்டேன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தாலோ, கில்டு அமைப்பின் மூலமாகவோ வரும் பிரச்சினைகளை மனதில் வைத்தே மெர்சல் டீம் வேலை செய்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, இதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சட்டரீதியாக தேனாண்டால் ஃபிலிம்ஸின் சட்டப் பிரிவு தயாராகவே இருக்கும் என்பதால் ரசிகர்கள் மெர்சல் படத்துக்குத் தடை’ என்ற செய்தியறிந்து பரபரப்படையாமல் டீசர் கொண்டாட்டத்தைத் தொடரலாம்.


Related Post

காதல், கல்யாணம் இது எனது சொந்த விஷயம்: சமந்தா புகைச்சல்!

22 Jan, 2013

கவர்ச்சி படங்கள்.. PART -3

29 Jan, 2013

ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் - ஷில்பா ஷெட்டி

10 Sep, 2013