விஜய்க்கு உதவிய தனுஷ்..!!
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் மெர்சல். கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர், மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, நடனம், மேஜிக் காட்சிகள் என பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடக்க உதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தொழிலாளர் சம்மேளனத்துக்கும் ஏற்ப்பட்ட மோதல் காரணமாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெஃப்சி தொழிலாளர்கள் காலவரையறையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரஜினி நடித்த காலா உட்பட பல படங்களின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் தடைபட்டன. இந்நிலையில் மெர்சல் படத்தின் டப்பிங் பணிகளும் தடைப்பட்டன. பெஃப்சி தொழிலாளர்கள் போராட்டத்தால் டப்பிங் ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் படத்தின் பணிகள் நிறைவடைவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் படம் வெளியாவதில் கால தாமதம் ஏற்படுமோ என்று படக்குழுவினர் அச்சமடைந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் டப்பிங் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்து மெர்சல் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைய தனுஷ் உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Post

22 Jan, 2013

29 Jan, 2013

10 Sep, 2013