அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா..!!

சங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து சமீபத்தில் ‘குற்றம் 23’ படத்தை இயக்கினார். இதில் அருண் விஜய் நாயகனாகவும், மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது. இவர் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நயன்தாரா நடிப்பில் தற்போது ‘அறம்’ படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தை எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


Related Post

காதல், கல்யாணம் இது எனது சொந்த விஷயம்: சமந்தா புகைச்சல்!

22 Jan, 2013

கவர்ச்சி படங்கள்.. PART -3

29 Jan, 2013

ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் - ஷில்பா ஷெட்டி

10 Sep, 2013