கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன்: விவேக்..!!

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமலின் இந்த அறிவிப்புக்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- வருவது யாராக இருப்பினும் வாழ்த்துவது மரபாக இருப்பினும் மகுடம் தரிக்க வைப்பது மக்களே. அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Related Post

காதல், கல்யாணம் இது எனது சொந்த விஷயம்: சமந்தா புகைச்சல்!

22 Jan, 2013

கவர்ச்சி படங்கள்.. PART -3

29 Jan, 2013

ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் - ஷில்பா ஷெட்டி

10 Sep, 2013