இன்றைய ராசிபலன் (21.10.2015)

12143322_919575438131223_9203818882928962795_n மேஷம் மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உறவினர் கள், நண்பர்கள் எதிர் பார்ப்புகளுடன் பேசுவார்கள். நெடுநாளாக நீங்கள் காண நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை யால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். கடகம் கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். நன்மை கிட்டும் நாள். சிம்மம் சிம்மம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். கன்னி கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். துலாம் துலாம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். விருச்சிகம் விருச்சிகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். தனுசு தனுசு: கணவன்- மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய் வார்கள். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். மகரம் மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். கும்பம் கும்பம்: வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்களால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். மீனம் மீனம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


Related Post

இன்றைய ராசிபலன் (20.10.2015)

20 Oct, 2015

வீடியோவில் வாஸ்து விஞ்ஞானம்..

17 Apr, 2013

இவ்வார “எண்ஜோதிடம்” (15.04.13 முதல் 21.04.13 வரை) இலக்கம் -1,10,19,28

18 Apr, 2013